திருவாடானையில் போலி டாக்டர் கைது

திருவாடானையில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-30 18:45 GMT

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வர்ண தீர்த்த வடகரையில் ஹோமியோபதி வைத்தியம் என்ற பெயரில் ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக புகார் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன் ராஜ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் புகழேந்தி, திருவாடானை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் டாக்டர் எட்வின் மைக்கேல், திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், துணை தாசில்தார் ராமமூர்த்தி, ராமநாதபுரம் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் சசி பிரியா ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கு அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக திருவாடானை அரசு மருத்துவமனை டாக்டர் எட்வின் மைக்கேல் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்ததாக சிராஜுதீன் (வயது 50) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்