கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: ஏப்.17 முதல் சென்னை ஐகோர்ட்டில் முகக்கவசம் கட்டாயம்...!
ஏப்ரல் 17 முதல் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் வரும் 17ம் தேதி (திங்கட்கிழமை) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. வழக்குகள் பட்டியிலப்படாதவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரவிடப்பட்டுள்ளது.