நகராட்சி, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

நகராட்சி, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2023-01-12 10:56 GMT

ஆரணி

நகராட்சி, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

ஆரணி நகராட்சியில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் சிறார் கண்ணொளி திட்டத்தின் கீழ் கண் பரிசோதனை முகாம் நகராட்சி ஆணையாளர் பி. தமிழ்ச்செல்வி மேற்பார்வையில் நடந்தது. ஆரணி வடக்கு மாட வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் பி. மனோகரன் தலைமை தாங்கினார்.எஸ். வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய கண் பிரிவு பரிசோதகர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்களைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் கண்ணில் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் விரைவில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாலாமணி, இன்பராஜ், தீபா, ரமாபிரபா, கௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்