கண் பரிசோதனை முகாம்

நெலாக்கோட்டையில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2023-04-23 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். முகாமை நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி கண் சிகிச்சை நிபுணர் குழுவினர் நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 5 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்