வியாபாரியிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது
வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை டவுன் குமாரக்கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது23). இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று டவுன் தொட்டிப்பால தெருவை சேர்ந்த சிவராமன் என்ற ராமையா (27) என்பவர் சத்யராஜை கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவராமனை கைது செய்தார்.