விவசாயியிடம் நகை-பணம் பறிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே விவசாயியிடம் நகை-பணத்தை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45) விவசாயி. இவர் தனது கைப்பையில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு பவுன் நகையை வைத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை சென்னை மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் நகை-பணம் இருந்த கைப்பையை கண்ணனிடம் இருந்து பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.