தென்காசி, விருதுநகர் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்புக்கட்டண ரெயில் ஆகஸ்டு 6-ந் தேதி வரை நீட்டிப்பு
தென்காசி, விருதுநகர் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்புக்கட்டண ரெயில் ஆகஸ்டு 6-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
தென்னக ரெயில்வே சார்பில் எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி, விருதுநகர், மானாமதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சேவை கடந்த 15-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06035) அடுத்த மாதம் 8-ந் தேதி, 15, 22, 29 மற்றும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதிகளில் சனிக்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு இரவு 8.13 மணிக்கும், விருதுநகருக்கு இரவு 10.28 மணிக்கும் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்புக்கட்டண ரெயில் (06036) அடுத்த மாதம் 9-ந் தேதி, 16, 23, 30 மற்றும் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு விருதுநகருக்கு நள்ளிரவு 1.58 மணிக்கும், தென்காசிக்கு நள்ளிரவு 3.50 மணிக்கு வந்தடைகிறது. மறுநாள் பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.
இந்த ரெயில்கள் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்ட்ரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.