4 பேருக்கு காவல் நீட்டிப்பு

பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் 4 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-06-30 18:45 GMT

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அப்போதைய அ.தி.மு.க நகர் அவைத்தலைவராக இருந்தவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் அப்போதைய அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 பேரும் மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் மேற்கண்ட 5 பேர் மீதான விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிகாமணி தவிர மற்ற 4 பேரும் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கினை விரைவில் விசாரித்து தீர்ப்பு கூறும் வகையில் வருகிற 3-ந் தேதி வழக்கு விசாரணை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்