போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு

உளுந்தூர்பேட்டையில் போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு செய்தது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-02 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர்.குப்பம் வீதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52) விவசாயி. இவருக்கு சொந்தமான அதே கிராமத்தில் உள்ள நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது தந்தை பழனிமுத்துவுடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்து அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட நடராஜனை தங்கவேல் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து நடராஜன் கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரெண்டு பாலசுப்பிரமணியத்திடம் புகார் அளித்தார். அதன் பேரில் பழனிமுத்து மற்றும் தங்கவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்