கல் உப்புகளை ஏற்றுமதி செய்யும் பணி மும்முரம்

திடீர் மழை பெய்யலாம் என்பதால் உப்பூர், திருப்பாலக்குடி பகுதியில் இருந்து கல் உப்புகளை தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-07-12 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

திடீர் மழை பெய்யலாம் என்பதால் உப்பூர், திருப்பாலக்குடி பகுதியில் இருந்து கல் உப்புகளை தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உப்பு உற்பத்தி

தமிழகத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், வேளாங்கண்ணி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட பல கடற்கரையோர ஊர்களில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல ஊர்களில் உள்ள உப்பள பாத்திகளிலிருந்து கல் உப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் கோடைகால சீசன் தொடங்கும் போது உப்பு உற்பத்தி சீசன் தொடங்கும் செப்டம்பர் வரை இந்த உப்பு உற்பத்தி சீசன் இருக்கும்.

இந்த ஆண்டு மாவட்டத்தில் உப்பு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதிலும் அக்னி நட்சத்திரம் முடிந்து 2 மாதங்கள் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் தற்போது வரை குறையாததால் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி, உப்பூர், பத்தநேந்தல் மற்றும் தேவிபட்டினம் அருகே உள்ள கோப்பேரிமடம் உள்ளிட்ட ஊர்களில் கல் உப்பு விளைச்சல் அதிகமாக உள்ளது.

ஏற்றுமதி பணி தீவிரம்

தற்போது ஒரு டன் உப்பின் விலை ரூ.2 ஆயிரத்திலிருந்து 2,500 வரை விலை போவதாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்திலும் திடீரென மழை பெய்யலாம் என்பதால் பாத்திகளில் உற்பத்தியாகியுள்ள கல் உப்புகளை வேகமாக எடுத்து அதை லாரிகளில் ஏற்றி தமிழகத்தின் பல ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பாத்திகளில் இருந்து இந்த கல் உப்புகளை பிரித்தெடுத்து லாரிகளில் ஏற்றும் பணியில் ஏராளமான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்