கட்டிடக்கலை குறித்து மாணவிகளுக்கு விளக்கம்
சூளகிரி வரதராஜபெருமாள் கோவிலில் கட்டிடக்கலை குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சூளகிரி:-
உலக மரபு வாரத்தை முன்னிட்டு சூளகிரி வரதராஜ பெருமாள் கோவிலில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தொல்லியல் மற்றும் கோவில் கட்டடக்கலை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, நம்மை சுற்றியுள்ள பழங்கால பொருட்களையும், நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும், புதையலுக்காக அவற்றை தேவையின்றி தோண்டி எடுத்து அழித்துவிடக் கூடாது எனவும் மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் வரதராஜ பெருமாள் கோவில் கருவறையின் வடக்கு பக்க சுவற்றில் உள்ள 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹரிஹராயனின் மகனான விருப்பாட்சராயனின் கல்வெட்டு, மாணவிகளுக்கு படித்து காண்பிக்கப்பட்டது.
இதில் தொல்லியல் அலுவலர் பரந்தாமன், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், தலைமை ஆசிரியர் நாகலட்சுமி, ஆசிரியைகள் சித்ரா, தேன்மொழி, ஜெயசித்ரா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக தொல்லியல் துறையும், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வுக் குழுவும் செய்துஇருந்தன.