அரசு பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம்
வந்தவாசி அருகே அரசு பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம் நடந்தது.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே காமராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு தீத்தடுப்பு செயல்விளக்கம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார்.
தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பிரபாகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் (பாதுகாப்பு) சங்கர் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று, தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும், பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது என்பதை பற்றியும் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் நீர்நிலைகளில் குளிக்கும் போது பெற்றோர் துணையுடன் உரிய கவச உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியை கண்மணி, தீயணைப்பு துறையினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.