வல்லுனர் விதை ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வல்லுனர் விதை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-12 20:30 GMT

வடவள்ளி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 38-வது வருடாந் திர அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர் ஆராய்ச்சி திட்ட ஆய்வுக் கூட்டம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், இந்திய விதை ஆராய்ச்சி நிறுவனம், மாவ் மற்றும் விதை மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் 26-வது வருடாந்திர வல்லுனர் விதை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய விதை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சஞ்சய் குமார், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக உதவி இயக்குனர் யாதவா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை இயக்கு னர் ஷர்மா, விதை மைய இயக்குனர் உமாராணி ஆகியோர் பேசினர்.

விழாவில் அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர் ஆராய்ச்சி திட்டத்தின் 2022-23-ம் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையத் திற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த விதை ஆராய்ச்சி நிறுவனத்துக் கான விருதும், பாலாம்பூர் சவுத்ரி ஷர்வன் குமார் கிரிஷி விஷ்வ வித்யாலயா, லூதியானா இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத் துக்கும் சிறந்த விதை உற்பத்தி நிறுவனத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. விழாவில் 250-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்