குற்றாலம் ஐந்தருவியில் உற்சாக குளியல்
குற்றாலம் ஐந்தருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
அங்குள்ள ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.