பாலக்கோடு பஸ் நிலையத்தில்வடமாநில தொழிலாளியை தாக்கும் வாலிபர்கள் வீடியோ வைரலால் பரபரப்பு

Update:2023-08-15 01:00 IST

பாலக்கோடு:

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு வடமாநில தொழிலாளர் விஜய் (வயது 22) என்பவர் பாணிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை மது போதையில் கடைக்கு வந்த 3 வாலிபர்கள் பாணிபூரி வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதுதொடர்பாக விஜய்க்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 3 வாலிபர்களும் பாணிபூரி கடையை அடித்து நொறுக்கி வடமாநில தொழிலாளியை தாக்க முயன்றனர். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்