மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 15,616 மாணவ, மாணவிகள் எழுதினா் 914 பேர் தேர்வு எழுத வரவில்லை

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தமிழ் தேர்வை 15 ஆயிரத்து 616 மாணவ-மாணவிகள் எழுதினர். 914 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2023-03-13 18:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தமிழ் தேர்வை 15 ஆயிரத்து 616 மாணவ-மாணவிகள் எழுதினர். 914 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிளஸ்-2 தேர்வு

தமிழகம், புதுச்சேரியில் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்திலும் பிளஸ்-2 தேர்வுகள் நேற்று தொடங்கின. இந்த தேர்வை சிவகங்கை மாவட்டத்தில் 69 அரசு பள்ளிகள் உள்பட 163 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 7,594 மாணவர்களும் 8,938 மாணவிகளும் சேர்ந்து 16 ஆயிரத்து 532 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தமிழ் தேர்வை 7,220 மாணவர்களும் 8,396 மாணவிகளும் சேர்த்து 15 ஆயிரத்து 616 பேர் எழுதினார்கள்.

914 பேர் எழுதவில்லை

விண்ணப்பித்தவர்களில் 374 மாணவர்களும், 540 மாணவிகளும் சேர்த்து 914 பேர் ேதர்வு எழுத வரவில்லை. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முதன்மைகல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வுகளை பார்வையிட்டனர். முன்னதாக தேர்வு எழுத மாணவ-மாணவிகளை மன தைரியத்துடன் தேர்வு எழுத வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்