ராமியணஅள்ளி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Update:2023-01-09 00:15 IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியணஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1971-1972-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்புகளுக்கு சென்று, நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினர். 

மேலும் செய்திகள்