முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில செயற்குழு கூட்டம்
கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கேசவராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜசேகர், பொதுசெயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் பிரச்சினைகள் குறித்த ஆலோசனை செய்யப் பட்டது. அடுத்து திருப்பூரில் அனைத்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சி.ராமசாமி நன்றி கூறினார்.