ராணுவ வீரர் உடல் அடக்கம்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ராணுவ வீரர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2023-07-03 21:29 GMT

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோன்இளையராஜா(வயது38). திருச்சியில் உள்ள 117- வது ராணுவ பட்டாலியனில் ஹவில்தாராக பணியாற்றிய இவர் நேற்றுமுன்தினம் விடுமுறையில் மகிமைபுரம் பூண்டிக்கு வந்தார். பின்னர் அவர் மனைவி சுகன்யா, தனது அண்ணன் மகன்கள் சூர்யா, ஹரீஷ் ஆகியோருடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற தனது அண்ணன் மகன்களை காப்பாற்றிவிட்டு ஆரோன் இளையராஜா நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த ஆரோன்இளையராஜா உடலை திருக்காட்டுப்பள்ளி போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மகிமைபுரம் பூண்டியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு திருச்சி ராணுவபட்டாலியன் கர்னல் ஷாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்கள,் நண்பர்கள் அஞ்சலிக்கு பின்னர் ராணுவ வீரர் ஆரோன்இளையராஜா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்