மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் நிர்வாகி போக்சோவில் கைது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-10 22:03 GMT

லால்குடி:

ஆபாச குறுந்தகவல்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மேலவாளாடி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் லால்குடி ஒன்றிய செயலாளராக இருந்தார். இந்நிலையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஜெகதீசன் தனது செல்போனில் இருந்து ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் தந்தை, இது பற்றி லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெகதீசன் மீது இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இந்நிலையில் பூவாளூர் பகுதியில் ஜெகதீசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு இன்ஸ்பெக்டர் மாலதி தலைமையில் சென்ற போலீசார், உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, லால்குடி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்