எட்டிக்குட்டைபாளையம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

எட்டிக்குட்டைபாளையம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-01-16 23:29 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி எட்டிக்குட்டைபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் கொடியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் ஆப்பக்கூடல் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு பக்தர்கள் சென்று தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் அம்மன் தேரை பக்தர்கள் தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

மேலும் பெண் பக்தர்கள் பலர் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்ததுடன் அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்தும் வழிபட்டனர்.

விழாவில் ஆப்பக்கூடல், வேம்பத்தி, அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்