எட்டயபுரம்புதுஅம்மன் கோவில் கொடைவிழா
எட்டயபுரம் புதுஅம்மன் கோவில் கொடைவிழா நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் நடுவிற்பட்டி திருக்குறிப்புத் தொண்டர் நாயனார், பாண்டிய வண்ணார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட புது அம்மன் கோவில் கொடை விழா நடந்தது இதை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்து கோவிலில் இருந்து புறப்பட்டு பஜார் மற்றும் நகரின் முக்கிய வீதிகளின் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து நடுவிற்பட்டி மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை சென்றடைந்தது. பின்னர் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை மற்றும் அம்மனுக்கு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. நாளை (வியாழக்கிழமை) எட்டயபுரம் ஆன்மிக சொற்பொழிவாளர் உலகநாதன் தலைமையில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.