இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மேம்பாட்டு குழு கூட்டம்

நெல்லையில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மேம்பாட்டு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-20 19:19 GMT

நெல்லை இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மேம்பாட்டுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் காசிவிஸ்வநாதன், மாநில மருத்துவ அதிகாரி சுப்பிரமணியன், மருத்துவ கண்காணிப்பாளர் சீனிவாசன், துணை இயக்குனர் விஜயன் மற்றும் அதிகாரிகள், காப்பீட்டாளர்கள் கொண்டனர். இதில் இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலகம், இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மற்றும் அனைத்து கிளை அலுவலகங்களிலும் இ.எஸ்.ஐ. எண்ணுடன் ஆதார் அடையாள எண்ணை இணைப்பதற்கு சிறப்பு முகாம் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற்று வருவதாகவும், அனைத்து கணக்கு எண்ணை இ.எஸ்.ஐ. எண்ணுடன் இணைத்து ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் கணக்கு எண்ணை பெற்றும் கொண்டு அனைத்து இ.எஸ்.ஐ. பயன்களையும் தடையின்றி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்