கடையநல்லூர் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
கடையநல்லூர் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.;
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி பெண் ஊழியர்கள் புது பானையில் புத்தரிசி, பனைவெல்லம் போட்டு பொங்கலிட்டனர்.
விழாவில் பொறியாளர் லதா, இளநிலை பொறியாளர் ரவிச்சந்நிரன், சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேலு, தேர்தல் பிரிவு மாரியப்பன், ஸ்டீபன், நகர்மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன் ராமகிருஷ்ணன் மற்றும் அனைத்து பணியாளர்கள், அரசு ஒப்பந்தக்காரர்கள், பொதுமக்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.