சென்னை வரும் பிரதமர் மோடியை தனித்தனியே சந்திக்கும் இபிஎஸ் -ஓபிஎஸ்?

சென்னை வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருக்கிறார்.

Update: 2023-04-08 03:47 GMT

கோப்புப் படம்

சென்னை,

ரூ.2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சந்திக்க நேரம் கேட்டு இருந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவருக்குமே நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை சந்திக்க அவர் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். அதேவேளையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் பங்கேற்க இருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்