சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-06-09 19:21 GMT

கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் காமேஷ்வரராவ், இன்றைய தலைமுறையினர், இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட இயற்கையோடு எவ்வாறு இணைந்து வாழவேண்டும் என மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் பல விழிப்புணர்வு சுவரொட்டிகளை உருவாக்கி மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, இயற்கையை காப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் பள்ளியின் நிறுவனர் பழனிசாமி, தாளாளர் அசோக் சங்கர், செயலாளர் ஆனந்த் சங்கர், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்