தொழில்முனைவோர் சந்திப்பு கூட்டம்
காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில், கம்பத்தில் வட்டார அளவில் தொழில்முனைவோர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில், கம்பத்தில் வட்டார அளவில் தொழில்முனைவோர் சந்திப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் தலைமை தாங்கி அரசு திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து பேசினார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கீழ் செயல்படும் பனைவெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் நிறுவனத்தின் முதல்வர் பிரபாகர், உதவி இயக்குனர் பிரபாகரன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன், மனையியல் தொழில்நுட்ப வல்லுனர் ரம்யாசிவசெல்வி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தொழில்முனைவோர் உற்பத்தி செய்த மஞ்சள்பொடி, காளான்பொடி, காளான் சப்பாத்தி மாவு, சூப் பொடி, இட்லி பொடி, சிறுதானிய உடனடி கலவைகள், பல்வகை மசாலா பொடி ஆகியவை காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன. இதில் தொழில்முனைவோர் பலர் கலந்துகொண்டனர்.