தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

எரசக்கநாயக்கனூரில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நாளை நடக்கிறது

Update: 2023-06-25 19:00 GMT

மத்திய அரசு நிறுவனமான பனைவெல்லம் மற்றும் பனைப்பொருட்கள் நிறுவனம், காதி மற்றும் கிராமப்பொருட்கள் ஆணையம் சார்பில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. இதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு பேசுகின்றனர். தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள், அரசு மானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடக்கிறது. முகாமின் மூலம் திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு தரும் சலுகைகள் மூலம் தொழில் தொடங்குதல், தொழில் விரிவுபடுத்துதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் 2-வது கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை பனைவெல்லம் மற்றும் பனைப்பொருட்கள் நிறுவனம், காதி மற்றும் கிராமப்பொருட்கள் ஆணையத்தின் இயக்குனர் பிரபாகரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்