என்குப்பை என்பொறுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வேதாரண்யம் அரசு பள்ளியில் என்குப்பை என்பொறுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் வேதாரண்யம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் சுதா, கணேஷ், வனிதா, சதீஷ், கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மக்கும் குப்பை மக்காத குப்பைகளை கையாளும் முறைகள் குறித்தும், மட்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் நெகிழி பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தமிழக அரசின் சட்டங்கள் குறித்தும் பேசினர். முன்னதாக தூய்மை நல வாழ்விற்கான உறுதிமொழியை மாணவ-மாணவிகள் எடுத்துக்கொண்டனர். முடிவில் ஆசிரியர் மாணிக்கம் நன்றி கூறினார்.