அரசு பள்ளிகளில் ஆங்கில நண்பன் நிகழ்ச்சி

அரசு பள்ளிகளில் ஆங்கில நண்பன் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-06 19:15 GMT

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று அரசுப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழியை எளிதாக கற்றுக் கொடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் ரவுண்டு டேபிள் இணைந்து வடிவமைத்த ஆங்கில நண்பன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசுகையில், நான் முதல்வன் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 68 பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் 14 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி செல்லும்போது ஆங்கில மொழியை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்தோறும் 20 நிமிடம் கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 60 வகுப்புகள் உங்களுக்கு நடத்தப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம் கருத்துக்கள் கேட்டு மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளியில் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது சக மாணவ மாணவிகளுடன் தன்னம்பிக்கையுடன் உரையாடவும் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் இந்த நிகழ்ச்சி உதவும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்