கார் மோதி என்ஜினீயரிங் மாணவி பலி

கார் மோதி என்ஜினீயரிங் மாணவி உயிரிழந்தார்.

Update: 2023-02-11 20:32 GMT

கல்லூரி மாணவி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த பாக்குடி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகள் ஹரினிஷா (வயது 17). இவர் திருச்சி அருகே பூலாங்குளத்துப்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் தனது தோழி வினோதினியுடன் பூலாங்குளத்துப்பட்டி குறுக்குச்சாலையில் உள்ள ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க சென்றார். அங்கு பணம் எடுத்து விட்டு அவர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு கார் ஹரினிஷா மீது மோதியது.

பரிதாப சாவுகார் மோதி என்ஜினீயரிங் மாணவி பலி

இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த இனாம்குளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதற்குள் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர், மாணவி ஹரினிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாணவி வினோதினி கொடுத்த புகாரின் பேரில் இனாம்குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்