கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் சாவு

கரூரில் கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-26 18:45 GMT

மாணவர் பலி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆரியகவுண்டன்பட்டி விளாமரத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் தருண் (வயது 20). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தருண் தனது நண்பர்களுடன் கல்லூரியின் அருகே உள்ள ஒரு தோட்டத்து கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தருண் கிணற்றின் மேல்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, கால் தவறி தருண் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த தருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ெபாறியியல் கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்