திருணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்
நெமிலியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.
நெமிலியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.
திருமண நிச்சயம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வன்னியர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் உதயதர்ஷினி (வயது 21). நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் மசூதி தெருவை சேர்ந்த சேகர் மகன் தினேஷ் (24). இருவரும் நெமிலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
உதயதர்சனிக்கு திருமணம் செய்ய, அவரது தந்தை ஆனந்தன் முடிவு செய்து வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததால், உதயதர்ஷினி மற்றும் தினேஷ் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினர்.
காதலனுடன் போலீசில் தஞ்சம்
உதயதர்ஷினியை, பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை ஆனந்தன் நெமிலி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். இந்த நிலையில் உதயதர்ஷினியும், தினேசும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு வழங்கக்கோரி நெமிலி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வேறொருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் விரக்தியடைந்த ஆனந்தன், மகளை கண்டதும் அவரை தாக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உதயதர்ஷினி மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி தினேஷ் உடன் அனுப்பி வைத்தனர்.