தாராபுரம் அருகே பட்டா நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தாராபுரம் அருகே பட்டா நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-12-30 13:01 GMT

தாராபுரம்

தாராபுரம் அருகே பட்டா நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆக்கிரமிப்பு

தாராபுரம் அருகே பட்டா நிலத்தை ஆக்கிரப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபாளையம் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாசில்தார் ஜெகஜோதியிடம் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தாராபுரத்தை அடுத்த குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது ஆலாம்பாளையம் கிராமம் ஆண்டிபாளையம். இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா பெற்று வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டை ஒட்டி உள்ள பொது இடத்தில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு காரணமாக காலனியில் பொது வழியை பயன்படுத்தும் போது தகராறு ஏற்படுகிறது. மேலும் இதனால் பெண்கள் வேலைக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பிறகு பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது தகராறு ஏற்படுகிறது. நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா பெற்றவர்களுக்கு நில அளவையரை கொண்டு அளவீடுகள் செய்து அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டும் அவரவர்கள் உபயோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்கிரப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்போம் என பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் புகார் மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ஜெகஜோதி நில அளவையரை கொண்டு அளந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்