சக்தி பெற்றேன், புளகாங்கிதம் அடைந்தேன் - துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சாமி தரிசனம் செய்தார்.;
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று வருகை தந்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் அவரது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
இது குறித்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "தில்லை நடராஜர் கோவில்! தன்யனானேன், சக்தி பெற்றேன், புளகாங்கிதம் அடைந்தேன். சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் தரிசனம் செய்து, நாட்டு மக்கள் அனைவரும் நலமடைய வேண்டி பிரார்த்தனை செய்தேன். நடராஜப் பெருமான் நம் மனங்களில் இருந்து அறியாமையையும் தீமையையும் அகற்றி, இந்த பிரபஞ்சத்தை அமைதி மற்றும் செழிப்புடன் அருள்பாலிப்பார்." என்று தெரிவித்துள்ளார்.