வேலைவாய்ப்பு முகாம்

தேனி நாடார் சரசுவதி கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

Update: 2023-06-08 13:51 GMT

நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு நிறுவனம், நான் முதல்வன் இயக்கம் ஆகியவை சார்பில் தேனி நாடார் சரசுவதி கலைக்கல்லூரியில் பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமை, தேனி மாவட்டத்தில் நடத்துவதற்கு நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தகுதியான நபர்களை பணிக்கு தேர்வு செய்ய உள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கான முன்பதிவு கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. இத்தகவலை, கல்லூரி முதல்வர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்