தென்னந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்
தென்னந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியையொட்டி செல்லபிள்ளை ஊருணி அருகே ராஜபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ண ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு புகுந்த காட்டு யானைகள் 40-க்கும் மேற்பட்ட தென்னங்கன்று குருத்துகளை அடியோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விவசாயி கூறியதாவது, காய்ப்பு பருவத்திற்கு வந்த பாதி மரங்களும், 2 வருடங்கள் வளர்த்த தென்னங்கன்றுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன், தகுந்த இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.