விவசாய நிலங்களில் புகுந்து 4 யானைகள் அட்டகாசம்

வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து 4 யானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2022-07-29 16:45 GMT

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தளிக்கோட்டூர் வனப்பகுதியில் 4 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், திதித்தும் அட்டகாசம் செய்து வந்தன. இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று வனதுறையினர் விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து 4 யானைகளையும் விரட்ட முயன்றனர். இதனால் யானைகள் சிகரமாகனப்பள்ளி வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த யானைகளை சானமாவு வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்