பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் யானைகள் கணக்கெடுப்பு பணி

பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

Update: 2023-05-19 19:50 GMT

விக்கிரமசிங்கபுரம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டத்தில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. அதன்படி அம்பை வனகோட்டத்திற்குட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் ஆகிய 4 வனச்சரகத்தின் வனப்பகுதிகள் 42 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் நேரடியாக கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று 2 கிலோ மீட்டர் நேர் கோட்டு பாதையின் இருபுறமும் காணப்படும் சாணங்களின் எண்ணிக்கையை கொண்டு கணக்கிடப்பட்டது. பாபநாசம் வனச்சரகத்திற்குட்பட்ட கோவில் தேறி பகுதிகளில் பாபநாசம் வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் யானையின் எச்சம் மற்றும் காலடித்தடங்களை வைத்து கணக்கெடுப்பு நடத்தினர்.

இதேபோல் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு முதல் 5 வனக்காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு கணக்கெடுப்பு பணிகளை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்