தேன்கனிக்கோட்டையில்யானை தாக்கி இறந்த முதியவர் குடும்பத்திற்கு இழப்பீடு

Update:2023-03-08 00:30 IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி அருகே உள்ள ஜார்க்கலட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுடப்பா (வயது 76). இவர் நேற்று முன்தினம் காலை காணாமல் போன மாட்டை தேடி வனப்பகுதிக்குள் சென்றார். அப்போது புதரில் மறைந்திருந்த ஒற்றை யானை சவுடப்பாவை விரட்டி சென்று தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து உயிரிழந்த சவுடப்பா மகனிடம் முதற்கட்ட இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை வனத்துறையினர் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்