அய்யூர் சாலையில் நடந்து சென்ற யானை

தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் சாலையில் நடந்து சென்ற யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

Update: 2022-10-18 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் சாலையில் நடந்து சென்ற யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

சாலையில் நடந்து சென்ற யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் 7 யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது கிராமப்பகுதிகளுக்குள் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, தக்காளி, பீன்ஸ், முட்டை கோஸ் உள்ளிட்ட விளை பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளை வனத்துறையினர் விரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை பெரிய பூதக்கோட்டை கிராமத்தில் சுற்றித்திரிந்தது. இதை பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர். இதனால் அந்த யானை பெரிய பூதக்கோட்டை பகுதியில் தேன்கனிக்கோட்டை-அய்யூர் சாலையில் சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றது.

கிராம மக்கள் அச்சம்

இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தினர். நீண்ட நேரம் அய்யூர் சாலையில் சுற்றித்திரிந்த இந்த யானை பின்னர் அங்கிருந்து விளை நிலங்கள் வழியாக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று யானையை அடர்ந்து வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். யானை சுற்றி வருவதால் பெரிய பூதக்கோட்டை கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்