மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-05 18:45 GMT

விழுப்புரம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். விழுப்புரம் கோட்ட செயலாளர் அருள், திட்ட செயலாளர் சேகர், மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி, பொருளாளர் ஏழுமலை ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத்தொகையுடன் உடனே வழங்க வேண்டும், மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் வீரமுத்து, பெருமாள், கன்னியப்பன், வெங்கடகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைத்தலைவர் குணசேகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்