மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பழனியில், மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-29 15:41 GMT

பழனி மின்வாரிய பாரதீய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். கிளை தலைவர் சரவணன், பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு, மின்வாரியம் மற்றும் தொழிற்சங்கங்களை இணைத்து முத்தரப்பு ஒப்பந்தம் போடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்