பெரியகுளத்தில் மின்வாரிய ஊழியர் தற்கொலை

பெரியகுளத்தில் மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-29 17:10 GMT

பெரியகுளம் வடகரை, வீரேஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் தேவதானப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முருகன் விபத்தில் சிக்கி, காயமடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். ஆனால் அவருக்கு காயத்தின் வலி அதிகமாக இருந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இதற்கிடையே சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது முருகன் விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்