மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-08-10 18:24 GMT

அரக்கோணம் டவுன் மின்வாரிய அலுவலகம் சார்பில் உதவி செயற் பொறியாளர் புனிதா தலைமையில் மின்சார பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரக்கோணம் எஸ்.ஆர்.கேட்டில் தொடங்கி பழனி பேட்டை, பஜார், பழைய பஸ் நிலையம், சோளிங்கர் ரோடு வழியாக புதிய பஸ் நிலையம் வரை சென்றனர்.

அப்போது மின்சார பாதுகாப்பு, மின் சேமிப்பு மற்றும் ஆன் லைன், கூகுள் பே மூலம் கட்டணங்கள் செலுத்தப்படுவது போன்றவைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்