அறந்தாங்கியில் நாளை மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அறந்தாங்கியில் நாளை நடக்கிறது.
மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் அறந்தாங்கி செயற்பொறியாளர் பகிர்மான கழக அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.