மின்சார வாரிய குறைதீர்க்கும் கூட்டம்

வத்தலக்குண்டுவில் மின்சார வாரிய குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2023-05-22 19:00 GMT

வத்தலக்குண்டு மின்சார வாரியம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வத்தலக்குண்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் திண்டுக்கல் மின்பகிர்மான வட்டமேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் தலைமை தாங்குகிறார். அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை வத்தலக்குண்டு மின்பகிர்மான செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்