பெரம்பலூரில் நாளை மின் விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூரில் மின் விழிப்புணர்வு முகாம் நாளை நடக்கிறது.

Update: 2023-02-11 18:30 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் பாதுகாப்பு குறித்து மாதம் இருமுறை மக்களை தேடி மின் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மின் பாதுகாப்பு குறித்தும், மழைக்காலங்களில் மின் சாதனங்களை பாதுகாப்புடன் பயன்படுத்துவது, மின்சாதனங்களை பாதுகாப்புடன் பயன்படுத்த பாதுகாப்பு கருவிகள் அமைப்பது போன்றவை குறித்து மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் தெளிவாக எடுத்துரைக்கப்படும். மேலும் மழைக்காலங்களில் மின் கட்டமைப்பில் ஏற்படும் பழுது, மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்றவற்றை உரிய பிரிவு அலுவலகங்களில் பொதுமக்கள் தெரியப்படுத்தவும், ஸ்டே கம்பிகளில் கால்நடைகளை கட்டாமல் இருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அனுமதியின்றி மின்வேலி அமைப்பது சட்ட விரோதமானது. இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சட்ட விரோதமாக வயலில் மின்வேலி அமைப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். அதோடு மின்வேலி அமைக்கப்படும் வயல்களில் உள்ள விவசாய மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெரம்பலூர் மின் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்