மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

ஆபத்தான மரங்களை அகற்றும் போது மின்தடை ஏற்படுவதால், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-07-14 20:15 GMT

குன்னூர்

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக இருப்பதால், அதிக வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதிகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரத்திலும் உள்ளன. மேலும் குடியிருப்பு பகுதி அருகிலும் மரங்கள் காணப்படுகிறது. பருவமழை காலங்களில் மரங்கள் சாலைகள், வீடுகள் மீது விழுந்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற மனு கொடுக்கும் போது வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதி வழங்குகின்றனர். தொடர்ந்து மரங்களை மர வியாபாரிகள் அகற்றி வருகின்றனர். அவ்வாறு அகற்றும் போது, மின் கம்பிகள் மீது மரங்கள் விழுவதால் மின்தடை ஏற்பட்டு குடியிருப்புகள் இருளில் மூழ்கும் நிலை காணப்படுகிறது. குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள ஹைபீல்ட் பகுதியில் இதே நிலை நீடிக்கிறது. எனவே, வரும் நாட்களில் ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதி கொடுக்கும் போது, மின்சாரம் நிறுத்தப்படும் நாட்களில் மரங்கள் அகற்றப்பட்டால், பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது. மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்