மைல் கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு

ஆற்காடு அருகே மைல் கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்.

Update: 2023-08-06 18:31 GMT

வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 18). இவர் ஆற்காடு அருகே உள்ள தாஜ் புரா பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது நண்பர் வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். ஆற்காடு அருகே உள்ள கரடிமலை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையின் ஓரம் இருந்த மைல் கல் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்